பனைமலை
விழுப்புரத்தில் 22 கி.மீ. தொலைவில்
பனைமலை உள்ளது.
இங்கு தாலகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ‘தாலகிரி’ என்ற
வடமொழிச் சொல் ‘பனைமலை’ என்ற பொருளைக் கொடுக்கிறது.
பனைமலைக் கோவில் இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்ம
பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். பல்லவர் காலத்துச்
சிறந்த ஓவியத்திற்கு எடுத்துக்காட்டாகப் பனைமலை ஓவியத்தைக்
கூறுவர். ‘பார்வதி தேவியின் உருவம்’ இங்குள்ள
குறிப்பிடத்தக்க
ஓவியமாகும்.
|