நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு
அருகில் உண்டாக்கினார்.
கி.பி. 1750இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சுத் தளபதி
செஞ்சியைக் கைப்பற்றினார். 1750முதல் 1761வரை செஞ்சிக்
கோட்டை பிரெஞ்சுக்காரர் வசம் இருந்தது. 1761இல்
ஸ்டீபன்
சுமித் என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப் பட்டது.
1780இல் மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியைப் பிடித்தார்.
ஆனால், மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர்
வசம் வந்தது. இதன்பின் செஞ்சிக்கோட்டை
அதன் இராணுவ
முக்கியத்துவத்தை இழந்தது. இன்று செஞ்சிக்
கோட்டை ஒரு
தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது.
இன்றைய செஞ்சிக் கோட்டை
கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை
வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண
வடிவில் செஞ்சிக்
கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள
இக்கோட்டை
கீழ்க்கோட்டை (Lower
Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும்
பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்
கோட்டையினுள் நுழைய
ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில்,
பாண்டிச்சேரி
வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன.
திசைகளை வைத்துப் பார்ப்பின்
கிருஷ்ணகிரிக் கோட்டை
வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும்,
சந்த்ரயன் துர்க்கம்
தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின்
உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது.
இம்மூன்றில்
இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உயரம்
235 மீட்டர் ஆகும்.
கிருஷ்ணகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில்
சாலையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது.
மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு
பெரிய
தானியக் களஞ்சியங்களைக் காணலாம்.
இதையடுத்துத் தெய்வ
|