என்று திட்டமாகக் கூறமுடியாது. எந்தச் சொல்லும் முதன் முதல் மக்களின் பேச்சு வழக்கில் பயின்றுவரவேண்டும். அதன் பின்னர்த் தான் அது கல்வெட்டில் இடம் பெறும். அன்றியும் இக் கல்வெட்டுக்குக் காலத்தால் முந்திய கல்வெட்டு ஒன்றில் இச் சொல் ஆளப் பெறவில்லை என்பதற்கு என்ன சான்று உளது? நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் வெளியானவை ஒரு சிலவே ; வெளியாகாமல் கிடப்பவை பல்லாயிரம் உண்டு. அவற்றில் ஏதேனும் ஒன்றில் பங்களம் என்னும் பெயர்ச்சொல் ஆளப் பெற்றிருக்கக் கூடும். இஃதேயன்றித் தென்னார்க்காடு மாவட்டத்தில் பங்களர் எனப் பெயர் பெற்றிருந்த மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதையும் ஈண்டுக் கருத்தில் வைக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் காவிரியாறு ‘காவேரி’ என்று அழைக்கப்படுகின்றது. அதனாலும் இக் காப்பியம் பிற்பட்டதென்பர். சிலப்பதிகாரத்தில் இசைப் பாட்டுகள் நிரம்பிய கானல் வரியில் மட்டுந்தான் ‘காவேரி’ என்னும் சொல் ஆளப்படுகின்றது. மற்றெல்லா இடங்களிலும் ‘காவிரி’ என்னும் பெயரே வழங்குகின்றது. காவேரி என்னும் சொல் இசைக்குத் தக்கதான ஒலி நெகிழ்ச்சி கொண்டுள்ளது. கோவலன் யாழை வாங்கிக் ‘காவேரி’ என்று அழைத்துப் பாடத் தொங்குகின்றான் என்பதைக் கூறுமிடத்திலும் இளங்கோவடிகள், ‘காவிரியை நோக்கினவும், கடற்கானல்வரிப் பாணியும் மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்’ என்று ‘காவிரி’ என்னும் பெயரையே ஆண்டுள்ளதை நோக்கவேண்டும்.68 சிலப்பதிகாரம் வழக்குரை காதையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வெண்பாக்களில் முதல் வெண்பா69 அறத்தைப் பற்றிப் பேசுகின்றது. பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய நான்மணிக்கடிகையில் வரும் ஒரு செய்யுளும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றது. எனவே, சிலப்பதிகாரம் காலத்தால் நான்மணிக்கடிகையினும் பிற்பட்டதாகும் என்றுங் கூறுவர். இங்குக் குறிக்கப்பெறும் ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்’ என்னும் மொழி ‘பல அவையாரால்’ நாட்டப்பட்ட ஓர் அறமொழியாம் என்று அந்த வெண்பாவே தெரிவிக்கின்றது. எனவே, அம்மொழி புதிதன்று ; ஒருவரால் மட்டும் நிறுத்தப்பட்டதன்று. மற்றும் பழமொழி நானூற்றைக் கற்று இளங்கோவடிகள் ‘முற்பகல்செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் 68. சிலப். 7 : 19, 20. 69. சிலப். 20 ; வெண்பா-1 |