பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 145

அணிவது வழக்கம்.72 அவர்கள் கம்பளி ஆடைகளையும் அணிவதுண்டு. நகர
மக்கள் பஞ்சாலும், பட்டாலும், ஒருவகை மலையெலி மயிராலும், வேறு சிறு
விலங்குகளின் மயிராலும் ஆடைகள் நெய்தார்கள்.73 அடியார்க்கு நல்லார் தம்
சிலப்பதிகார உரையில் முப்பத்தாறு ஆடை வகைகளைக் குறிப்பிடுகின்றார்.74
துணிகள் மிகமிக நுண்ணிய நூல்களினால் நெய்யப்பட்டன. அவற்றுள்
தனித்தனி இழைகள் கண்ணுக்குப் புலப்படா.75 புகையைப் போலவும்,
பாலாவியைப் போலவும், பாம்பின் தோலைப் போலவும், மூங்கிலின் உரியைப்
போலவும் துணிகள் நெய்யப் பெற்றன.76 ஆடைகட்குப் பூவேலைகள்
செய்வதுண்டு.77 பட்டுப் புடவைகளின் முன்தானைகளில் குஞ்சம்
கட்டப்பட்டது.78 சில பூந்துகில் வகைகள் மிகவும் வழுவழுப்பாக இருந்த
காரணத்தால் வழுக்கி வழுக்கிச் சரியுமாம்.79 துணிகளுக்கு நறுமணம்
ஊட்டுவதுண்டு.80

     உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் இடையில் ஒரு வேட்டியும்,
மேலாடையும் அணிவர்.81 சிலர் சட்டை யணிவதுமுண்டு.82 அரசரும்,
அவர்களுடைய பணியாளரும் மட்டுமே சட்டை அணிவர்; இச் சட்டைக்குக்
‘கஞ்சுகம்’ என்று பெயர்.83 வாழ்க்கையில் உயர்நிலையில் நின்றவர்கள் மிகக்
குறைந்த உடையையே உடுத்தனர். பணியாளர்கள்தாம் வேட்டியும் சட்டையும்
அணிந்தனர்.84 சிலர் அரையில் மட்டும் ஆடை யணிவதுண்டு. ஊர் ஊராகச்
சென்று பண்டங்களை விற்றுவந்த வணிகர்கள் காலில் செருப்பு
அணிந்திருந்தனர்.

     பெண்கள் இடையில் புடவையை அணிந்திருந்தனர். அவர்கள் தம்
மார்பகத்தை ஆடையால் மறைக்கும் வழக்கம் அக் காலத்தில் இல்லை;
சந்தனத்தால் தொய்யில் எழுதியும் மலர்களை அணிந்துமே மார்பை
மறைப்பர்.85 பெண்மக்கள் இடையில் மேகலை யணிந்து அதன்மேல் பூந்துகில்
சுற்றிக்

     72. நற்றி. 320, 359; புறம். 61, 116.
        248, 340, 341; முல்லைக்கலி, 2: 5-7.
     73. சிலப். 14: 205-7; சீவக. 1898, 2686
     74. சிலப். 14: 106-12.
     75. பெரும்பாண். 236.
     76. புறம்.337, 338: 9-11.
        பொருநர். 82-83;
        சிறுபாண். 235-236.
     77. புறம். 274.
     78. பொருநர். 155.
     79. மருதக்கலி, 20.
     80. சிலப். 14 : 205-7.
     81. புறம். 189 ;
        மதுரைக். 435.
     82. சிலப். 16 : 106-8;
         முல்லைப். 66.
     83. சிலப். 5; (157 உரை)
         சிலப். 26: 166, சிலப். 28 : 80.
     84. பெரும்பாண். 75.
     85. முல்லைக்கலி, 11: 17