| கொள்ளுவார்கள்; 86 பாடினிகள் தம் உடம்பின் பெரும் பகுதியையும் வெளியில் காட்டிக்கொண்டனர். சில சமயம் பெண்டிர் துணியால் தம்மைப் போர்த்துக் கொள்ளுவதுமுண்டு.87 புதுமணப் பெண்கள் புத்தாடையால் தம் உடலையும் முகத்தையும் மறைத்துக் கொள்ளுவர்.88 பூத்தொழில் இயற்றப்பட்ட செம்பட்டாடைகள் கடைகளில் விற்பனையாயின. பூப்போட்ட வெண்ணிறப் புடவைகளையும் பெண்கள் அணிந்தனர்.89 வெண்ணிறப் புடவைகளை அணிந்து பெண்கள் பந்தாடுவது வழக்கம். செக்கர்வானைப் போன்ற செவ்வண்ண மூட்டிய, பூ வேலை செய்யப்பட்ட, மிகமிக நுண்ணிய புடவைகள் மதுரையிலே அங்காடிகளில் விற்பனையாயின.90 உறையூரில் மிகமிக மென்மையான மஸ்லீன் துணிகள் நெய்யப்பட்டு வந்ததாகப் பெரிப்புளூஸ் கூறுகின்றது. அணிகலன்கள் பண்டைத் தமிழகத்துப் பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப் பெறாத தம் உடலை அணிகலன் பூண்டு மறைத்தனர். மகளிர் பல்வேறு அணிகலன்களினால் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். யவனர் ஏற்றிவந்து இறக்கிய பொன்னும், மன்னர் பகைவரிடமிருந்து கவர்ந்து கொணர்ந்த பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும் அரித்தும் எடுத்த பொன்னும் தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன. முத்தும், பவழமும், இதர மணிவகைகளும் இழைத்துப் பலவகையான அணிகள் செய்யப்பட்டன. கைதேர்ந்த கம்மியர்கள் இவ்வணிகளைச் செய்தனர்.91 மகளிர் அணிந்த அணிகலன்கள் சிலவற்றைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன் வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளைமீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகியவை அவை. இவையன்றி, மோசை என்னும் மரகதக் கடைசெறி,92 கழுத்திலணியும் 86. சிலப். 6: 88 87. சிலப். 13: 172. 88. அகம். 86. 89. பரிபா. 11: 79-84. 90. மதுரைக். 431-3, 513. 91. சிலப். 16: 105-6. 92. நற்றி. 188 : 4 |