| தமிழகத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதியாயின. கொடுமணம் என்ற ஊரில் செய்யப்பட்ட பொன்னணிகள் மக்களால் பெரிதும் பாராட்டப் பெற்றன.108 தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள் அளவுகடந்த விருப்பத்தைக் காட்டி வந்தனர். அக் காலத்தில் ஒப்பனைக் கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு, நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர்;109 கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். கூந்தலில் பல வகையான மலர்களைச் சூட்டிக் கொள்ளுவர். பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன. 110 மகரவாய்,111 வகிர்112 என்ற தலையணிகளையும் அவர்கள் அணிவதுண்டு. மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள் அணிவர். மலர் சூடாது வெறுங்கூந்தல் முடிப்பதைப் பெண்கள் இழிவாகக் கருதினர்.113 மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை யூட்டுவர்.114 கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்துவார்கள்.115 அதை இரு தொகுதியாக வகிர்ந்து பின்னிவிடுவார்கள்.116 கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில் தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்வார்கள்.117 இக் காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் தமிழ்ப் பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து முழுகும் வழக்கம் இருந்து வந்தது.118 பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளுவர். மைதீட்டும் குச்சிக்குக் ‘கோல்’ என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின் பெண்கள் கண்ணை ‘உண்கண்’ என்றே கூறுவதுண்டு.119 மகளிர் நறுமணப் பாக்கும் வெற்றிலையும் போட்டுக்கொள்ளுவர்.120 ஆடவரும் தலைமயிர் வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப் 108. பதிற். 67: 1, 74; 5-6. 109. புறம். 147. 110. குறிஞ்சிப். 61-67. 111. கலி. 54. 112. கலித். 55. 113. ஐங்குறு. 290; கலித். 28; புறம். 54; 302. 114. புறம். 146. 115. குறிஞ்சிப். 109. 116. குறுந். 52 117. பரிபா. 12, 20. 118. குறுந். 113. 119. குறுந். 38, 167. 120. பரிபா. 12. 22. |