பக்கம் எண் :

New Page 1

இசைக் கலை

119


 

 வேதநாயகம் பிள்ளை, முத்துத் தாண்டவராயர், மாம்பழக் கவிச்சிங்க
நாவலர், அண்ணாமலை ரெட்டியார முதலியோர்.

 

 அந்நியர் ஆட்சியில் இசைக் கலை

 

     கி.பி.17, 18ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ் நாட்டில் அரசியல்
நிலையற்றதாகி, அந்நியர் ஆட்சியில் பட்டு, நாட்டில் குழப்பமும் கலகமும்
ஏற்பட்டிருந்தன. தெலுங்கர்களான நாயக்கச் சிற்றரசர்களும்,
மகாராஷ்டிரர்களும் முகம்மதியர்களும், பாளையக்காரர்களும் தமிழ் நாட்டில்
ஒவ்வொரு பகுதியைப் பிடித்துக் கொண்டு அரசாண்டனர். அந்நியராகிய
இவர்கள் தமிழர் கலைகளையும் தமிழர் பண்பையும்
அறியாதவர்கள் ஆகையால், இவர்கள் மற்றக் கலையைப் போற்றாதது
போலவே, இசைக்கலையையும் போற்றவில்லை. அக்காலத்தில் தமிழ்
இசைவாணர் ஆதரிப்பாரற்றுத் தவித்தனர். தெலுங்குப் பாடல்களுக்குச்
செல்வாக்கு ஏற்பட்டது. தமிழ் நாட்டிலே தெலுங்குப் பாடல்களுக்கு
ஆதிக்கம் உண்டாயிற்று. இந்தப் பழக்கம் 19, 20ஆம் நூற்றாண்டிலேயும்
தொடர்ந்துவந்தது.
 

     கி.பி.19, 20ஆம் நூற்றாண்டுகளில் அரசியற் குழப்பங்கள்
அடக்கப்பட்டு, நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்து அமைதியும் ஒழுங்கும்
நாட்டில் நிலைபெற்ற பிறகும், மராட்டிய மன்னர், தெலுங்கு மன்னர்,
முகம்மதிய மன்னர்களின் அதிகாரங்கள் அடங்கி ஒழிந்தபின்பும்,
தமிழ்நாட்டிலே தெலுங்குப் பாடல்கள் பாடும் நிலை இருந்துவந்தது. இதன்
காரணம், பரம்பரையாக இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத் தெலுங்குப்

பாட்டையே பயின்று பாடி வந்த பாடகர், குருட்டுத்தனமாக
அப்பாடல்களையே பாடிவந்ததுதான்.

 

     இன்னொரு காரணம், இசையைக் கொண்டு வயிறு வளர்ப்பதற்காக ஒரு
சூழலை உண்டாக்கிக் கொண்ட ஒரு சிறு கூட்டம், தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டிருந்தும் தமிழ்ப்