பக்கம் எண் :

120
120

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

பற்று இல்லாமல் தமிழ்ப்பாடல்களைப் பாடாமல் தெலுங்குப் பாடல்களைப்
பாடிவந்ததாகும்.

 

தமிழிசையின் மறுமலர்ச்சி

 

     இவ்வாறு தமிழ் இசைப் பாடல்கள் போற்றப் படாமல் இருந்த
நிலையை மாற்றித் தமிழ் இசைக்கு மறுமலர்ச்சி உண்டாக்கிக் கொடுத்தவர்
கலைவள்ளல்  சர்.அண்ணாமலைச்செட்டியார் அவர்கள். இம்முயற்சியில்
இப்பெரியாருக்குப் பேருதவியாக இருந்தவர் டாக்டர் ஆர்.கே. சண்முகம்
செட்டியார்
அவர்கள்.

 

     இப்பெரிய அரசியல் மேதைகளின் சிறந்த உயர்ந்த முயற்சியை
எதிர்த்தவர்கள் தெலுங்கரும், மராட்டியரும், முகம்மதியரும் அல்லர். பின்னர்
யார் என்றால், தமிழர் என்று சொல்லிக்கொண்டு, ஆனால், தமிழ்ப் பற்றுச்
சிறிதும் இல்லாமல், எந்த வழியிலாவது வாழவேண்டும் என்னும் கீழ்த்தரமான
கொள்கையையுடைய ஒரு சிறு கூட்டந்தான் தமிழ் இசை இயக்கத்தை
எதிர்த்துப் பின்னர் அடங்கிவிட்டது.

 

     ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசைச் சங்கம்
அமைத்தும், தமிழிசைக் கல்லூரி நிறுவியும், இசைத்தமிழ் நூல்களை
வெளிப்படுத்தியும் பெருந்தொண்டு செய்தார்கள். இச்சமயத்தில் இன்னொரு
வகைக் கருத்தைக் கவனிப்போம்.

 

சமணரும் இசைக் கலையும்

 

     இசைக் கலையை அழித்தவர் ஜைனராகிய சமணர் என்று ஓர்
அபவாதம் கூறப்படுகிறது. சமண சமயத்தவர் மீது பகைச் சமயத்தார் கற்பித்த
பல அபவாதங்களில் இதுவும் ஒன்று. இது வீண்பழியாகும். உண்மையை,
ஆராயும்போது, சமணர்  இசைக்கலையை நன்கு போற்றி வளர்த்தனர்
என்பது விளங்குகிறது. இதற்குச் சமண சமயத்தவர் நூல்களேசான்றாகும்.