பக்கம் எண் :

இசைக் கலை

121


 

    திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி என்னும் காவியத்திலே
இசைக்கலைச் செய்திகளும், ஆடல்பாடல் செய்திகளும், யாழ் என்னும்
இசைக்கருவியின் செய்திகளும் பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றில்
காந்தருவதத்தையார் இலம்பகம் என்பது சிறப்பானது. காந்தருவதத்தை
என்பவள் இசைக்கலையில் சிறந்தவள்.1
 

     காந்தருவதத்தை, தன்னை யார் இசையில் வெல்கிறானோ அவனையே
திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறாள். அதன் பொருட்டு இசையரங்கு
அமைக்கப்படுகிறது. பல அரசகுமாரர்கள் வந்து இசைபாடித் தோற்றுப்
போனார்கள். கடைசியாக சீவக குமாரன் வந்து இசைபாடி,
காந்தருவதத்தையை வென்று அவளை மணஞ் செய்து கொள்கிறான்.

 

     ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி
என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு
கிழவன் போலக் கிழவேடம் பூண்டு கன்னி மாடத்தில் சென்று இசைப்பாடல்
பாடுகிறான். அவ்விசைப் பாடலைக் கேட்ட சுரமஞ்சரி, தனது விரதத்தை
நீக்கிச் சீவகனை மணஞ் செய்து கொள்கிறாள். இச்செய்தியைச் சீவக

சிந்தாமணி, சுரமஞ்சரியார் இலம்பகத்தில் காணலாம்.

 

     இவ் இசைச் செய்திகளை ஜைன சமய காவியமான சீவகசிந்தாமணியில
 ஜைன சமயத்தவரான திருத்தக்க தேவர் கூறுகிறார்.
 

     பெருங்கதை என்னும் உதயணன் கதையும் ஜைன சமய காவியம்.
இதனை இயற்றிய புலவர் கொங்கு வேளிர் என்னும் சமணப் பெரியார். இக்
காவியத்திலும் இசைக்கலையைப் பற்றிய செய்திகள்
கூறப்படுகின்றன.
இக்காவியத்

 


1. காந்தருவதத்தை என்பதற்கு இசைக்கலையில் வல்லவள் என்பது பொருள். காந்தருவம் என்பது இசைக்கலை.