|
122 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
தலைவனாகிய உதயணன் என்னும் அரசகுமரன், இளமை வயதில் பிரமசுந்தர
முனிவரிடத்தில் இசைக்கலையைப்
பயில்கிறான். மேலும், கோடபதி என்னும்
யாழ்
வாசிப்பதில் வல்லவனாக விளங்குகிறான்.
அவனுடைய யாழின்
இசையைக் கேட்டு
யானைகளும் அவன் வசமாகின்றன.
பிறகு உதயணன் அவந்தி நாட்டரசன் மகள் வாசவதத்தை
என்பவளுக்கு யாழ்
வாசிக்கக் கற்பிக்கிறான்.
பிறகு பதுமாபதி என்னும்
அரசகுமாரிக்கும் யாழ் கற்பிக்கிறான்.
இச்செய்திகளைப் பெருங்கதை
கூறுகிறது. சிறப்பாக யாழைப் பற்றிப் பெருங்கதை, மகத
காண்டம், 14
நலனாராய்ச்சி, 15 யாழ்நலம்
தெரிந்தது என்னும் பகுதிகளும், வத்தவ
காண்டம், யாழ் பெற்றது என்னும் பகுதியும் யாழ்ச் செய்திகளைக்
கூறுகின்றன.
மற்றொரு ஜைன சமய நூலாகிய ஸ்ரீபுராணம் 23ஆவது
தீர்த்தங்கரராகிய
நேமிநாதசுவாமி
புராணத்தில் வசுதேவன் வரலாற்றைக்
கூறுமிடத்தில் இசைக்கலையைப்
போற்றிக் கூறுகிறது. சம்பாபுரத்து
அரசன்
மகளும் ஒரு காந்தருவதத்தை. அதாவது,
கந்தர்வ வித்தையாகிய
இசைக்கலையில் தேர்ந்தவள்.
அவளை இசையில் வெற்றி
பெறுகிறவர்கள்
அவளை மணஞ் செய்யலாம் என்று அரசன் பறையறைந்து, அதன்
பொருட்டு இசையரங்கு ஏற்படுத்துகிறான். பல அரச குமாரர்கள் வந்து
அரசகுமாரியுடன்
பாடித் தோற்றுப் போகின்றனர். கடைசியில் வசுதேவர்
வந்து இசை பாடியும் யாழ்
வாசித்தும்
வெற்றிபெற்றுக் காந்தர்வதத்தையை
மணஞ்செய்கிறார்.
இச்செய்திகள், ஜைன சமயத்தவரால் எழுதப்பட்ட ஜைன சமய
நூல்களிலே
காணப்படுகின்றன. உண்மை இப்படி
இருக்க, ஜைனர்
இசைக்கலையை அழித்தனர் என்று
கூறுவது அறியாதார் கூற்றாகும்;
அல்லது, வீண்பழி
சுமத்துகிற சமயப் பகைவர் கட்டிய
கதையாகும். தமிழில்
இலக்கண
|