பக்கம் எண் :

108தமிழ் இன்பம்

லிட்டான்.   இவ்  வேலனைப்  பாலன்  என்றெண்ணி  இகழ்ந்த  சூரன்
பட்ட  பாட்டை நீ அறியாயோ?  இன்னும்,  தக்கன் வேள்வி கட்டழிந்த
நாளில்  நீ  மானங்   குலைந்ததை   மறந்தனையோ?   வலிமை சான்ற
வேலன்  மேலும் பொருமி அழுது  அரற்றுவானாயின்,  இளையவனாகிய
வீராவகு   பொங்கி   எழுவான்.  அவன்  சீற்றத்தை  மாற்ற எவராலும்
இயலாது.   ஆதலால்,   முருகன்  வருந்தி அழைக்குங்கால் அவனுடன்
வந்து   விளையாடுதலே    உனக்கு    அழகாகும்”   என்று  முனிவர்
அறிவுறுத்தினார்.

தாம்     உரைத்த  மொழிகளைச்  சிறிதும்   நெஞ்சிற்  கொள்ளாது
செருக்குற்று    விண்ணிலே    தவழ்ந்து    சென்ற   விண்மதியையும்,
அம்மதியை  மறந்து  மற்றொன்றைக்  கருத மனமற்றிருந்த முருகனையும்
கண்ட     முனிவர்     செய்வதொன்று     மறியாது    சிந்தனையில்
ஆழ்ந்திருந்தார்.

அந்  நிலையில்  முருகனை  வீட்டிற்  காணாத   அவன்   தந்தை;
‘முருகா,  முருகா’   என  அழைத்துக் குன்றின் சாரலை வந்தடைந்தார்;
ஆங்குக்  கரும்  பாறையின்  மீது முனிவரும் குமரனும் அமர்ந்திருக்கக்
கண்டார்;    அருமந்த     முருகனை    விரைந்தெடுத்து   ஆர்வமுற
அணைத்துக்  கண்ணீர்  துடைத்து,  அழகொழுகும் அவன் திருமுகத்தை
அமர்ந்து   நோக்கி,  ‘என்   கண்ணே! கண்மணியே! நீ ஏன் அழுதாய்?
தேனும்   தினையும்   வேண்டுமா? பாலும் பழமும் வேண்டுமா?’ என்று
விருப்புடன்   வினவி   முத்தமிட்டார்.  முத்தமிட்டு நிமிர்ந்த அத்தனது
சடையிலமைந்த   பிறை   மதியை  முருகன்  கண்டு கொண்டான்; தன்
விருப்பத்திற்