பக்கம் எண் :

114தமிழ் இன்பம்

ளையே   விரும்பும்  பொது  மாதர்  உள்ளத்தில்,  அன்பெனும்  பசை
அணுவளவும்   இராது  என்று  அறிஞர்  கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
அத் தன்மை வாய்ந்த பெண்டிரை,

“நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவர்”

என்று     மணிமேகலை  ஆசிரியர்   குறித்துப்  போந்தார்.  ஆகவே,
இடருற்றபோது   நீங்கும்    இயல்புடையாரோடு    உறவு  கொள்ளாது,
கொடுந்துயர்   உற்ற   போதும்   விட்டு  நீங்காத   கொடியன்னாரைத்
துணைக் கோடலே இருமையும் இன்பம் தருவதாகும்.