பக்கம் எண் :

142தமிழ் இன்பம்

கனியைக்   காலால்    மிதித்துச்   சிதைத்தாள்.  அரும்பசி   தீர்க்கும்
அமுதக்கனி   சிதைந்தழியக்     கண்ட    தவமுனிவர்    சீற்றமுற்றுப்
‘பன்னீராண்டு நீ  கடும்    பசியால்  நலிந்துழல்க’  என்று பிழை செய்த
பேதையைச்  சபித்தார்.   அச்  சாபத்தின்  வலிமையால்  அன்று முதல்
வயிறு  காய்ந்து  வருந்திய   மங்கை  பன்னீராண்டு  பசியால் வருந்திய
பின்பு  அமுதசுரபியினின்று   மணிமேகலை    வழங்கிய   அன்னத்தை
உண்டு பசி தீர்ந்தாளென்று  பழஞ்சரிதை கூறுகின்றது.

அமுதம்  காக்கும் நெல்லிக்  கனி  தமிழகத்தில்   உண்டு என்பதை
அறிந்தான் அதிகமான் என்ற  சிற்றரசன்; அதனை  அருந்தி  நீடு வாழ
ஆசையுற்றான்.  மந்தியுமறியா   மரங்கள்   செறிந்த    தென்மலையில்,
பளிங்கரும்  அணுகுதற்   கரிய   விடரொன்றில்  நின்றது அந் நெல்லி.
அதை   அறிந்த   காவலன்   பல்லாண்டுகளாகப்  பெரிதும்  முயன்று,
விடரை அடைவதற்கு  வழியமைத்து,  மருந்து  தூவி, மலை வண்டுகளை
விலக்கி,    மஞ்சினில்  மறைந்திருந்த  செழுங்   கனியைச்  காவலாளர்
மூலமாகப்   பெற்றான்.   பல்லாண்டுகளுக்கு    ஒரு   முறை பழுக்கும்
பான்மை  வாய்ந்த  அந்  நெல்லிக்    கனியின்  வண்ணத்தை, வள்ளல்
அங்கையில்    வைத்து   நோக்கி  அகமகிழ்ந்திருக்கையில்,  சொல்லின்
செல்வியாகிய  ஒளவையார்,   செந்தமிழ்க்   கவி பாடி அவன் முன்னே
சென்றார்.   அப்பாட்டின்  சுவையைச்     செவி   வாயாகப்   பருகிய
அதிகமான்  மது  உண்டவன்போல்  மகிழ்வுற்றான்.   அதிமதுரக்  கவி
பாடிய  ஒளவையார்க்கு  அமுதம்  பொழியும் நெல்லிக்  கனியே   ஏற்ற
பரிசென்று எண்ணி, அங்கையில் இருந்த கனியை