பக்கம் எண் :

148தமிழ் இன்பம்

தானைத்   தலைவர்க்கும்   விடை கொடுத்த  பின்பு, சிறிது இளைப்பாற
எண்ணினான்.  விழாவிற்காக  அணிந்திருந்த   ஆடை  அணிகளையும்,
உடைவாளையும்   களைந்தான்;   அரண்மனை   ஒடுக்கத்திற்  போந்து
இளைப்பாறக்  கருதி  வீர  முரசத்திற்குரிய   மணி  மஞ்ச  மாடத்தின்
வழியே  சென்றான்;   அங்கே   பழுத்த  மேனியும்   நரைத்த முடியும்
வாய்ந்த  பெரியார்  ஒருவர்  தளர்ந்து  கண்வளரக்  கண்டான்; அவரது
முகத்தின் விளக்கத்தால் அவர் வாக்கில்  ஒளியுண்டெனத்  துணிந்தான்;
அவரணிந்திருந்த    பழுதுற்ற    உடையினைக்    கண்டு   பூமகளால்
புறக்கணிக்கப்பட்டவர் எனத் தெளிந்தான்;

“இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு”

என்னும்       பொருளுரையை       நினைந்து       பொருமினான்;
அருந்தமிழறிந்த  புலவரது   மேனி   தோய்ந்ததால்  வீரமணி  மஞ்சம்
புனிதமுற்றதெனத்   ருதி   மன   மகிழ்ந்தான்;   அயர்ந்த உறக்கத்தில்
ஆழ்ந்திருந்த பாவலர்க்குப் பணி  செய்யக்  கருதி,  மஞ்சத்தின் அருகே
கிடந்த  பெருங்  கவரியைத் தன் வலக்கையால்  எடுத்து  வீசிநின்றான்;
செங்கோலும்  வெம்படையும்   பற்றிப்   பழகிய  கையினால்  சேரமான்
பணியாளர்க்குரிய  கவரியைப்  பற்றிக்   குழைத்துக்  கவிஞர்க்குப் பணி
செய்வானாயினான்.

உறக்கம்   தெளிந்த   கீரனார்  தளர்வு  தீர்ந்து  கண்  விழித்தார்;
மெல்லிய மஞ்சத்திலே தாம்  படுத்திருப்பதையும்  காவலன்  அதனருகே
நின்று  கவரி  வீசுவதையுங்  கண்டு  உளம்  பதைத்தார்;  தாம்  கண்ட
காட்சி கனவோ