பக்கம் எண் :

அறிவும் திருவும்153

வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையு மிலமே”

என்று     இரங்கிக்  கூறும்  மொழிகள்  உள்ளத்தை  உருக்குவனவாம்.
அப்பெண்மணிகள்,    தந்தையை   இழந்து   தமியராயினர்;   நாட்டை
யிழந்து  நல்குர  வெய்தினர்.  முல்லைக்குத் தேரீந்த வள்ளலின் மக்கள்,
தொல்லை      வினையால்     துயருழந்து    அரற்றும்    மொழிகள்
நல்லோருளத்தைக் கரைப்பனவாகும்.

மணப்     பருவமுற்ற  அம் மங்கையரைப்  பாரியின்  தோழராகிய
கபிலர்,  இருங்கோவேள்  என்னும்   குறுநில  மன்னனிடம் அழைத்துச்
சென்று,  “ஐயனே!  இவர் இருவரும்  பறம்பிற்  கோமானாய பாரி ஈன்ற
மக்கள். யான் இவர் தந்தையின் தோழன்;  அம் முறையில்  இவர்  என்
மக்கள்;  இம்  மங்கையரை   உனக்கு   மணம்   செய்யக் கருதி இங்கு
அழைத்து   வந்தேன்”   என்று   தம்   கருத்தை  அறிவித்தபொழுது,
அக்குறுநில  மன்னன்,  பாரி  மகளிரை  மணம் புரிய மறுத்துவிட்டான்.
அப்பால்  அருங்கவிப்  புலவர்,  வருந்திய  முகத்தோடு அங்கு நின்றும்
அகன்று,  மற்றொரு  குறிஞ்சி   நிலக்  கோமானிடம்  சென்று,  அவன்
பெருமையைப் போற்றிப் புகழ்ந்து, பாரியின்  மக்களை  மணம்புரியுமாறு
வேண்டினார்.    வள்ளலின்    மக்களாயினும்,    வறுமை    யெய்திய
மங்கையரை   மணம்   புரிய   இசையாது   அக்  குறுநில  மன்னனும்
மறுத்துவிட்டான்.   அவ்விருவரது   செயல்  கண்டு  சிந்தை  யழிந்தார்
செந்தமிழ்ப்  புலவர்.  அற்ற  குளத்து   அறு  நீர்ப்  பறவை போலாது,
பாரியின் மக்கள் வறுமையெய்திய நிலைமையிலும் அவர்க்கு