“திருமால் இருஞ்சோலை மலை என்றேன், என்ன, திருமால் வந்துஎன் நெஞ்சு நிறையப் புகுந்தான்” என்பது திருவாய்மொழி. சோலைமலையுடைய திருமால், அழகர் அன்னும் பெயருடையார். ‘அழகும் அழகுடையார்க்கு ஆகும்’ என்ற முறையில் சோலைமலை அவருக்கு உரியதாயிற்று. அழகர் மலை என்ற பெயரும் பெற்றது. இதை யெல்லாம் அறிந்து, “அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை” என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்!
* வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும். |