பக்கம் எண் :

இருமையில் ஒருமை201

VII. இருமையில் ஒருமை

31. ஆண்மையும் அருளும்

நினைப்பிற்கு     எட்டாத  நெடுங்காலமாக      இம்  மாநிலத்தில்
மண்ணாலும்   பெண்ணாலும்   மறப்  போர்    நிகழ்ந்து  வருகின்றது.
உலகிலுள்ள  மக்கள்  ஒரு    வயிற்றுப்  பிறந்தாற்போல்  ஒற்றுமையாக
வாழத்  தலைப்பட்டால்,    போர் ஒடுங்குமென்று மும்மையும் உணர்ந்த
மூதறிஞர்      கருதுகின்றார்கள்.  ஆறறிவுடைய  மாந்தர்  அமர்க்களம்
புகுந்து,   அடுபோர்  புரிந்து,  குருதி  சொரிவதை  நினைக்கும் போது
அறிஞர்    நெஞ்சம்  குலைவது  இயல்பேயன்றோ?  இதனாலேயே இந்
நாட்டில்     முறை   திறம்போது  அரசாண்ட  மன்னர்கள்  மாறுபட்ட
அரசரோடு    மலைய   நேர்ந்தக்கால்   அறநெறி   விலகாது   அமர்
விளைத்தார்கள்.

அருளும்     ஆண்மையும்    இனிதமைந்த   பண்டை    அரசர்,
மாற்றாரொடு போர் தொடங்கு முன்னே, மதி