பக்கம் எண் :

210தமிழ் இன்பம்

மாதரையும்    கொன்ற  கொடும்  பாவமும்  குறைந்து ஒழிந்துவிடலாம்.
ஆனால்,   செய்ந்நன்றி   மறந்தோர்    எக்காலத்தும்  எவ்வாற்றானும்
அப்பாவத்தினின்றும்   தப்பிப்      பிழைத்தல்  இயலாததாகும்  என்று
வள்ளுவர்   கருத்தைக்   கம்பர்     விரித்துரைத்தார்.  ‘உப்பிட்டவரை
உள்ளளவும்  நினை’    என்றும், ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல்
ஆகாது’  என்றும்,  தமிழ்நாட்டில்    வழங்கிவரும் பழமொழிகளே, இந்
நல்லறம் இங்கு நெடுங்காலமாகப்   போற்றப்பட்டு வருவதற்குப் போதிய
சான்றாகும்.

செய்ந்நன்றி     அறிதலென்னும்     செம்மை  சான்ற  தொல்லறம்
அங்கநாட்டு  அரசனாய    கர்ணனிடமும்,  இலங்கை  நாட்டு வீரனான
கும்பகர்ணனிடமும்        தலைசிறந்து     விளங்கிற்று.     கர்ணன்,
கன்னியாயிருந்த    குந்திதேவியின்     மைந்தனாய்த்   தோன்றினான்.
கன்னிப்  பருவத்திலே  பிறந்த  மைந்தனையும்,    அவனை  உயிர்த்த
அன்னையாய தன்னையும் உலகோர்   பழிப்பர் என்று உன்னி, அழகிய
மைந்தனை  ஒரு  பேழையில்    அடைத்து  ஆற்றில்  விட்டாள் அம்
மங்கை.   ஆதரவற்று     ஆற்றில்   மிதந்து  வந்த  மைந்தன்,  ஒரு
தேர்ப்பாகனின் கையிற்   சேர்ந்து, அவன் மனையில் வளர்பிறை போல்
வளர்ந்து   வந்தான்.    இளமையிலேயே  வீரமும்  அழகும்  வாய்ந்து
விளங்கிய கர்ணனைக் கண்ட துரியோதனன்,

“கற்றவர்க்கும் நலனிறைந்த
   கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று
   உயர்ந்தவர்க்கு வாழ்வுடைக்