பக்கம் எண் :

இருமையில் ஒருமை225

என்று   வீரமொழி  பகர்ந்து  தன்  தோழனுக்காக உயிரையும் கொடுக்க
இசைந்து  நின்றான்.   “என்   காவலில்  அமைந்த  கங்கை  யாற்றைக்
கடந்து  இவர்  போவாரோ?   தோழன் என்ற நாயகன் உரைத்த சொல்
ஒரு   சொல்லன்றோ?    நன்றி    மறவாத   நாய்போல்,  தலைவனது
ஆணைக்கடங்கிக்  காவல்  புரியும் ஏழையேன்,  அமர்க்களத்தில் இறந்த
பின்னன்றோ,  பரதன்   இராமனைப்  பார்க்க வேண்டும்” என்று குகன்
கூறிய   மொழிகளில்   தலையாய  அன்பு தழைத் திலங்கக்  காணலாம்.
இவ்வாறு  குகனைப்   போல்  உயிர்  கொடுக்கத்  துணியவும்  இயலாத
தனது சிறுமையை நினைத்துச் சுக்ரீவன் வருந்தினான்.

ஆகவே,     காளத்தி வேடனும் கங்கை வேடனும் அன்பு நெறியில்,
ஒப்பாரின்றி   உயர்வுற்று   ஏனைய   அன்பர்க்கு    ஒரு   கலங்கரை
விளக்கமாக அமைந்திலங்கும் தன்மை இனிது விளங்கும்.