பக்கம் எண் :

பாரதியார் பாட்டின்பம்249

றாகும்.     ‘பொக்க  மிக்கவர்’   பூவையும்  நீரையும்   கலை   மகள்
பொருளாகக்    கருதமாட்டாள்.   கலைவடிவாய    நாமகள்  விரும்பும்
வழிபாடுதான்  யாதோ  என்றறிய விரும்புவோர்க்குப் பாரதியார் நல்வழி
காட்டுகின்றார்.   தமிழ்  நாட்டிலுள்ள வீடுதோறும் கலையின் ஒளி திகழ
வேண்டும்.   வீடுதோறும்  இரண்டொரு  கல்லூரி  இலங்க  வேண்டும்.
நகரந்தோறும்   கலாசாலைகள்   ஓங்க வேண்டும். கல்வி நலம் அறியாத
கசடர் வாழும்  ஊர்களை  எரியினுக்கு இரையாக்க வேண்டும். இவ்வாறு
அறியாமையை   அழித்து  ஒழித்து  யாண்டும் கலையின் ஒளி விளங்கச்
செய்தலே  நாமகளின்   அருள்   பெறுதற்குரிய  நல்ல  வழிபாடென்று
பாரதியார் அறிவிக்கின்றார்.

நாட்டிலுள்ள    ஏழை   மாந்தர்க்கு    எழுத்தறிவித்தல்   நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமென்னும் உண்மையை,

“இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் 
   இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

   ஆல யம்பதி னாயிரம் நாட்டல்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
  
   பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியங் கோடி

   ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்”

என்று   பாரதியார் அறிவித்துப்  போந்தார்.  பல்லாயிரம் ஆண்டுகட்கு
முன்னமே  அறத்தின்   பெருமையை   அறிந்து,  அதனை  ஆர்வமுற
வளர்த்த  நாடு  தமிழ் நாடாகும். வருந்தி வந்தவர் அரும்பசி  களைந்து
அவர்