பக்கம் எண் :

258தமிழ் இன்பம்

தமிழன்னை,     தலையிலணிந்த   சூளாமணி சரிய, இடையிலணிந்த
மணிமேகலை  தளர,    இணையடிச்  சிலம்புகள்  புலம்ப,  கண்கலங்கி
நின்று,    தன்      தகை   சான்ற   பிள்ளைகளை   நோக்கி   ‘என்
ஆருயிர்மக்காள்!   ஆதி சிவனருளால் இந் நானிலத்தில் தோன்றினேன்;
முத்தமிழறிந்த    முனிவரருளால்  திருந்தினேன்;   நற்றமிழ்  மன்னரது
செல்வச்  சிறுமியாய்ச்  செழித்து    வளர்ந்தேன்;  அறிவறிந்த  மக்கள்
ஆக்கி யளித்த காவியக் கலனணிந்து    விளங்கினன்; இடைக் காலத்தில்
பல  நல்லணிகளைப்  பறிகொடுத்தேன்.  இன்று    பசையற்ற  மாக்கள்
பதறாமற்   பேசும்   வசைமொழி   என்    செவியினைச்  சுடுகின்றது.
உள்ளத்தை  அறுக்கின்றது.  புத்தம் புதிய   கலைகள் மேலைநாடுகளில்
மெத்த  வளர்கின்றனவாம்.  அக்     கலைகள்  ஐம்பெரும் பூதங்களின்
திறத்தினை  அருமையாக     உணர்த்துகின்றனவாம்.  இம்  மேன்மைக்
கலைகள்  என்பால்    இல்லையாம்.  மேலைநாட்டு  மொழிகளே  இனி
மேலோங்கி    வாழுமாம்.  யான்  மெல்லத் தளர்ந்து, மேன்மையிழந்து
அழிந்து     ஒழிவேனாம்.  இவ்வாறு  மதியிலார்  உரைக்கும்  மாற்றம்
அறியீரோ?  பேதையர்   கூறும் புன்மொழி கேளீரோ? இவ்வசை மொழி
என்பாலமைய நீர்    வாளா விருத்தலாகுமோ? எட்டுத் திசையும் சென்று
கிட்டிய   கலைகள்    யாவும்  கொணர்வீர்.  புத்தணி  புனைந்து  என்
நலத்தினைப்     புதுக்குவீர்.   நல்ல  கலைப்பொருள்  அனைத்தையும்
வாரிக்கொணர்ந்து    நல்குவீர். ஆதி பகவன் அருள் வலியாலும், இன்று
சார்ந்த  புலவரது    தவவலியாலும், அப்பேதையர் உரைத்த பெரும்பழி
ஒழியும். இசையோடு இப்