பக்கம் எண் :

மேடைப் பேச்சு39

யாகப்     பெற்றுள்ள  நாம்,  இவ்வுலகிலுள்ள       எந்நாட்டாரக்கும்
எவ்வாற்றானும்  குறைந்தவரல்லோம்.  ஆதலால்,  எந்நாட்டிலிருந்தாலும்
எத்தொழில்   செய்தாலும்   தமிழ்    மக்கள்   நெஞ்சில்  தமிழார்வம்
குடிகொண்டிருத்தல் வேண்டும். இன்று தமிழினம்  பல  வேறு நாடுகளிற்
பரவியிள்ளது. இவ்வுண்மையை யறிந்து பாடினார் பாரதியார்.

“சிங்களம் புட்பகம் சாவகம் ஆகிய
   தீவு பலவினும் சென்றேறி - ஆங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
   சால்புறக் கண்டவர் தாய்நாடு”

என்ற     பாட்டிலே   விரிந்து  பரந்த தமிழகம் குறிக்கப்  படுகின்றது.
இன்று    பர்மா,   மலேயா,   ஆப்பிரிக்கா,    அமெரிக்கா   முதலிய
அயல்நாடுகளிலும்  தமிழர்  வாணிகம்   புரிந்தும்   வளம் பெருக்கியும்
வாழ்ந்து  வருகின்றார்கள்.  அன்னவர்   அனைவரும்  தமிழ்த்  தாயின்
சேய்கள் என்று உணர்ந்து ஒன்றுபடல் வேண்டும்.

சுதந்திர     இந்தியாவில் நாட்டு மொழிகள்  தலையெடுத்து  வளரத்
தொடங்கியுள்ளன.  நாமிருக்கும்  நாடு  நமது   என்ற  உணர்ச்சி தமிழ்
மக்களிடம்  பெருகி  வருகின்றது,   “யாமறிந்த   மொழிகளிலே  தமிழ்
மொழி  போல்  இனிதாவ  தெங்கும்  காணோம்; யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல்,  வள்ளுவர்போல்,  இளங்கோவைப்போல்,   பூமிதனில்
யாங்கணுமே  பிறந்ததில்லை” என்ற  பாரதியார்  பாட்டின் உண்மையை
உணர்ந்து    பண்டைத்     தமிழ்ப்     பனுவல்களைத்   தமிழ்நாட்டு
இளைஞர்கள் பாராட்டிப்  படிக்கின்றார்கள்.  இத்தகைய  ஆர்வம் தமிழ்
வழங்கும் நல்லுலகெங்கும்