பக்கம் எண் :

42தமிழ் இன்பம்

மாளிகையாக உருவெடுத்துக் காட்சிதருகின்றன. அண்ணாமலையரசருடன்
இசைவளர்க்கும்  பெரும்  பணியில்  ஈடுபட்டுக் கண்ணினைக்  காக்கும்
இமைபோல் தமிழிசைக் சங்கத்தைக் காத்து வரும்  பேரறிஞர்   டாக்டர்
ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் அவர்களுடைய    கலை   வண்ணமும்
இம்மாளிகையிலே  காட்சி தருகின்றது.   இப்பெருந்தலைவர்  இருவரும்
முன்னின்று  நடத்திய திருப்பணி சிறக்கும் வண்ணம் பொருளுடையார்
ஆதரவு  புரிந்தனர்;  அருளுடையார் ஆசி கூறினார், இவ்வாறு ஒல்லும்
வகையால் உதவி  செய்து  தமிழிசைச்  கோயிலை உருவாக்கிய நல்லார்
அனைவருக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியதாகும்.  

தமிழ்நாடு   இப்பொழுது புத்துயிர் பெற்று வருகின்றது. இயல், இசை,
நாடகம்,   என்னும்  முத்தமிழும்  பொது மக்களின் ஆதரவைப் பெற்று
முன்னேறுகின்றன.    இவ்வாண்டில்,    சென்னை   மாநகரிலே  தமிழ்
வளர்ச்சிக்   கழகத்தின்   ஆதரவில்   இயற்றமிழ் விழா மிகச் சிறப்பாக
நடைபெற்றது.   நாடகத் தமிழாசிரியர்  முதுபெரும்புலவர்  திரு. சம்பந்த
முதலியார்   அவர்களின்   எண்பதாம்  ஆண்டு  நிறைவை முன்னிட்டு
இந்நகரில்  நிகழ்ந்த   நாடகத்தமிழ்  விழா என்றுமில்லாததோர் இன்பக்
காட்சியா  யிருந்தது, இசைத் தமிழ்  விழா  இன்று  இம்மன்றத்தில் மிகச்
சிறப்பாக    நடைபெறுகின்றது.   இம்  மூன்று  தமிழ்  விழாக்களையும்
தொடங்கி  வைத்து   ஆசி  கூறிய   அண்ணல், கைராசியுள்ள ராஜாஜி
என்றால், முத்தமிழின் முன்னேற்றத்திற்கு இனித் தடையும் உண்டோ?  

இசைத்     தமிழ் என்பது முத்தமிழின்  நடுநாயகமாக  விளங்குவது.
இசைத்  தமிழ்  என்றாலும்  தமிழிசை   என்றாலும்  பொருள்  ஒன்றே.
இயல், இசை, நாடகம்