பக்கம் எண் :

காவிய இன்பம்95

பாத்திரம்.  அதுவே,  அறம்   வளர்க்கும்  அருங்கலம்; பசிப் பிணியை
வேரறுக்கும் படைக்கலம்.

இத்     தகைய  அமுத   சுரபியைக்  கைக்கொண்டு  அற்றார்க்கும்
அலந்தார்க்கும்   தொண்டு   செய்ய   ஆசைப்பட்டாள்  மணிமேகலை;
“உண்டி  கொடுத்தோர்   உயிர்  கொடுத்தோரே” என்னும் உண்மையை
உள்ளத்திற்கொண்டு    அருளறம்   புரியத்   தொடங்கினாள்;  வருந்தி
வந்தவர்   அரும்பசி   களைந்து,   அவர்  திருந்திய   முகங்கொண்டு
திளைத்தாள்.   அவள்   ஆற்றிய  பணியால்  தமிழகத்தில்  பசிப்பிணி
ஒழிந்தது.

இன்று     தமிழகம்  என்றுமில்லாத  கடும்பஞ்சத்தின் வாய்ப்பட்டுப்
பரிதவிக்கின்றது.  “மாதம்   மூன்று  மழையுள்ள  நாடு; வருஷம் மூன்று
விளைவுள்ள   நாடு”   என்ற   புகழப்பெற்று  தமிழகத்தில்  இப்போது
எல்லோரும்    வயிறார    உண்பதற்குப்     போதிய   உணவில்லை.
குடிகளுக்குப்  படியளக்கும்  பொறுப்புடைய  அரசாங்கம், பொறி கலங்கி
வடநாட்டையும்   பிறநாட்டையும்   நோக்கி வாடி நிற்கின்றது. “பசியற்ற
நாடே  பண்புற்ற நாடு”  என்பது  பழந்தமிழர் கொள்கை. அதனாலேயே
முன்னாளில்   இந்நாட்டையாண்ட   மன்னர்கள்   பயிர்த்  தொழிலைக்
குறிக்கொண்டு      பேணினார்கள்;     காடுகளை    வெட்டித்திருத்தி
நாடாக்கினார்கள்;   ஆற்றிலே    அணைகள்   கட்டினார்கள்;  ஒல்லும்
வகையால்  உழவரை  ஆதரித்தார்கள்;  சுருங்கச்சொல்லின், தமிழகத்தை
ஓர் அமுத சுரபியாக்க ஆசைப்பட்டார்கள்.

பாரத      நாடு    இன்று    தன்னரசுபெற்ற    தனி    நாடாகத்
திகழ்கின்றது.வல்லரசு   நீங்கிவிட்டது. நல்லரசு நிலவுகின்றது. ‘நாட்டிலே
உண்ண உணவில்லை’