பக்கம் எண் :

98தமிழ் இன்பம்

முளதென்தமிழ்’     என்று   தமிழின்  வாசி  யறிந்து   ஆசி கூறினார்
கம்பர்.இத்  தகைய   இனிமை   வாய்ந்த   மொழியை  - மூவாச் சாவா
மொழியைப்   பிறப்புரிமையாகப்   பெற்ற பெருமை என்றும் தமிழருக்கு
உண்டு.  ஆயினும்,  தம்பெருமை  தாமுணராத் தன்மையராய்த் தமிழர்
இன்று  தமிழ்நாட்டில்   வாழ்ந்து  வருகின்றார்கள்.  அவர்களைத் தட்டி
எழுப்பி, தமிழ் அமுதை ஊட்டி,

“தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!”

என்று    ஊக்குதலே  அமுதசுரபி  செய்தற்குரிய  அருஞ்சேவையாகும்.
‘பாரகம்  அடங்கலும்   பசிப்பிணி  அறுக’   என்று  மணிமேகலையின்
கையில்  அமைந்த   அமுதசுரபியை   அன்று  வாழ்த்தினாள் ஆதிரை
என்னும்       நல்லாள்.        தமிழகத்தின்        தலைநகரமாகிய
சென்னையம்பதியிலே  இன்று  எழுகின்ற  தமிழ்  மயமான ‘அமுதசுரபி’
யைத்  ‘தேமதுரத்   தமிழோசை   உலக  மெலாம் பரவும் வகை செய்க’
என்று வாழ்த்துகின்றோம்; வரவேற்கின்றோம்.