அறிஞருள்ளத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. பாரத நாட்டின் அங்கங்களாக அமைந்த ஒவ்வொரு மாகாணத்திலும் அவரவர் தாய்மொழியின் வாயிலாகவே அறிவு ஊட்டப்படவேண்டும் என்ற கொள்கை உரம்பெற்று வருகின்றது. இவை யெல்லாம் பாரத நாட்டில் எழுந்துள்ள அறிவுப் பசியைக் காட்டும் அறிகுறிகள். இத் தகைய பசி, ஒல்லையில் வந்துவிடும் என்பதை முன்னரே அறிந்த பாரதியார், தமிழ் மக்களை நோக்கி, “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்துஇங்குச் சேர்ப்பீர்!” என்று பணித்துப் போந்தார். தமிழ் மொழியிலே ‘மறுமை இன்பத்தை அடைய வழிகாட்டும் மெய்ஞ்ஞான நூல்கள் மட்டும் இருந்தாற் போதாது; இம்மை யின்பம் பெறுதற் கேற்ற விஞ்ஞான நூல்களும் வேண்டும்’ என்று பாரதியார் ஆசைப்பட்டார்; அப் பணியிலே தலைப்படும்படி அறிவறிந்த தமிழ் மக்களை வேண்டினார். எனவே, அறிவுப் பசியைத் தீர்க்கும் அருங்கலைச் சுரபியாகவும் விளங்குதல் வேண்டும். தமிழ்மொழியின் தனிப் பண்புகளைத் தமிழ் நாட்டாருக்கு அமுதசுரபி வாரி வழங்கும் என்று நம்புகின்றோம். இனிமை என்பது தமிழின் தனிப் பண்பு. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பன்மொழி யறிந்த பாரதியார் பாடினார். அவருக்கு முன்னிருந்த அறிஞர்களும் கவிஞர்களும் மதுரம் நிறைந்த தமிழின் அருமையை மனமாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி யுள்ளார்கள். ‘என்று |