திருக்குறளுக்குப் பாரதம், இராமாயணம்,
மனுதர்மம், வேதம் இவைகளையே
ஒத்த நூல்களாகக் கூறலாம்; இவைகளைத்
தவிர வேறு ஒன்றையும்
திருக்குறளுக்குச் சமமாகக் கூறமுடியாது’’ (பாரதம் பாடிய
பெருந்தேவனார்)
|
|
|
‘‘வேத விழுப்பொருளை வெண்குறளால்
வள்ளுவனார்
ஓத வழுக்கற்றது உலகு
|
வேதத்திலே உள்ள உயர்ந்த
பொருள்களையெல்லாம், திருவள்ளுவர்,
திருக்குறளின் மூலம் சொல்லியிருப்பதனால்,
உலகத்தாரின் ஒழுக்கம்
கெடாமல் காப்பாற்றப்பட்டது’’.
|
|
|
‘‘வேதப் பொருளை விரகால்
விரித்து உலகோர்
ஓதத் தமிழால் உரை செய்தார்
|
|
வேதத்தில்
உள்ள பொருள்களை உலகத்தார் தெரிந்து கொள்ளும்படி
திறமையுடன் விரிவாகத் தமிழிலே எழுதினார் திருவள்ளுவர்’’.
(மதுரைப்
பெருமருதனார்)
மேலே காட்டியவைகள் அனைத்தும்
பழந்தமிழ்ப் பாடல்கள்.
திருக்குறளை ஆராய்ந்து கற்றறிந்த புலவர்களால் பாடப்பட்டவை.
இவைகள்
திருவள்ளுவ மாலை என்னும் நூலிலே காணப்படுகின்றன.
|
|
|
‘‘தேவர் குறளும் திருநான்
மறை முடிவும்
மூவர் தமிழும்
முனிமொழியும்-கோவை
திருவாசகமும் திருமூலர்
சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.
|
|
திருவள்ளுவர் இயற்றிய
திருக்குறள்; வேதங்களின் முடிவுகளைக் கூறும்
உபநிடதங்கள்; சம்பந்தர்,
அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய
தேவாரங்கள்; வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும்
வியாச சூத்திரம்;
திருக்கோவையார்; திருவாசகம்; திருமூலரால் பாடப்பட்ட
திருமந்திரம்
ஆகிய
|