பக்கம் எண் :

182சாமி சிதம்பரனார்

New Page 1
 

‘‘மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
 

சிறந்த குணம் உள்ளவனிடம் செல்வம் தோன்றியிருக்குமாயின், அது
எல்லா உறுப்புக்களும் மருந்தாகி நின்று தவறாமல் மக்களுக்குப் பயன்படும்
மரம் போன்றதாகும்’’                                      (கு.217)

இல்லற வாழ்க்கை நடத்துவோன், இல்லறத்திலே செய்யவேண்டிய
கடமைகளையெல்லாம் தவறாமல் செய்யவேண்டும்; அவன் எல்லோரிடமும்
அன்பு காட்ட வேண்டும்; அவனுடைய செல்வம் ஊருணிபோல்-நடுவூரில்
பழுத்திருக்கும் மரம்போல்- எல்லா உறுப்புக்களும் மருந்துக்குப் பயன்படும்
மரம்போல்-அனைவர்க்கும் பயன்படவேண்டும். இவ்வுண்மைகளையே
மேற்காட்டிய குறட்பாக்கள் கூறின. இல்லறத்தார்க்கு உரைத்த இவ்வறங்களை
ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
 

 

‘‘உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு.
 

தமக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், மற்ற
உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; அவ்வளவே தவத்தின் உருவமாகும்’’.

                                                                                                                     (கு.261)
 

 

‘‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம் அதனை
 அஃதுஇலார் மேற்கொள் வது.
 

உண்மையான தவநெறியில் வாழ்வோர்க்கே தவக்கோலம் தகுந்ததாகும்.
தவநெறியைப் பின்பற்றாதவர் தவக்கோலம் பூண்பதால் பயன் இல்லை’’

                                                                                                                    (கு. 262)
 

‘‘மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
        பழித்தது ஒழித்து விடின்.