|
உலகப்பொது நூல்
திருக்குறளிலே கூறப்படும் அறங்கள் உலகோர் அனைவருக்கும்
பொதுவானவை. எல்லா
மக்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவை.
இவ்வுண்மையைக்
காட்டும் சில குறட்பாடல்களை
மட்டும் பார்ப்போம்.
|
|
|
‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
|
இவ்வுலகில் இல்லறத்திலே இருந்து வாழவேண்டிய முறைப்படி
வாழ்கின்றவன்
சிறந்தவன்; அவன் வானுலகிலே உள்ள தேவர்களிலே
ஒருவனாக வைத்து
மதிக்கப்படுவான்’’. |
|
(கு.50) |
|
|
‘‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
|
அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தம்முடைய
இன்பத்திற்கே
உரியதாகக்
கொள்ளுவார்கள்; அன்புள்ளவர் தமது
எலும்பையும் பிறர் நன்மைக்கு உரிமையாக்குவர்’’. |
|
(கு.72) |
|
|
‘‘ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேர்அறி
வாளன் திரு
|
உலகத்தார் தன்னை விரும்பும்படி நடந்துகொள்ளுகின்ற பெரிய
அறிவுள்ளவனுடைய செல்வம், ஊராரால்
உண்ணப்படும் குளத்திலே நீர்
நிறைந்திருப்பது போலாகும்’’. |
|
(கு.215) |
|
|
‘‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்.
|
|
நல்ல பண்புகளை உடையவனிடத்திலே செல்வம் சேர்ந்திருக்குமாயின்,
அது
பயன்தரும்
மரம் ஒன்று ஊர் நடுவிலே பழுத்திருப்பதுபோல ஆகும்’’.
(கு.216)
|