|
இணைந்து வாழ்வதால்தான் உலகம் நிலைத்து நிற்கின்றது; உலக மக்கள்
வாழ்கின்றனர்; வளர்கின்றனர்;
மக்களிடையிலே அன்பும், கட்டுப்பாடும்,
சமுதாய
நீதிகளும் நிலைத்து வளர்ந்து வருகின்றன.
ஆண் பெண்களின் ஒன்றுபட்ட உண்மையான உறவினால்தான்
தனித்தனிக்
குடும்பங்கள் தோன்றின.
தனித்தனிக் குடும்ப வாழ்வு
மக்களிடையே நிலைத்த
பிறகுதான் அறமும் அரசியலும் தோன்றின.
மக்களுடைய
குடும்ப வாழ்விலே
இன்பமும், ஒழுக்கமும் வளர்வதற்கே,
அறநெறியும், அரசியலும் வேண்டியிருந்தன.
அறநெறியிலே நிற்பதற்கும்,
இன்பத்துடன் வாழ்வதற்கும் செல்வம்
இன்றியமையாதது. இத்தகைய
செல்வத்தை
ஈட்டுவதற்கும், உண்டாக்குவதற்கும்
துணை செய்வது
அரசியல்தான். அரசியல் இன்றேல் செல்வம் இல்லை.
பொருள்
இல்லை.
அறம், பொருள் அனைத்தும் மக்கள், இன்ப வாழ்வுக்குத்தாம் என்பதே
தமிழர் கொள்கை. ஆதலால்தான்
தமிழ் நூல்கள் அனைத்தும் அறம்
பொருள்இன்பங்களைப்பற்றியே கூறுகின்றன. சங்கநூல்களிலே
இன்பத்தைப்பற்றிக்
கூறும்
நூல்களே ஏராளம்;அகப்பொருளைப்பற்றிக்
கூறும் செய்யுட்களே அதிகம்.
வள்ளுவரும், அறமும் பொருளும் இன்பத்தைப் பெறுவதற்கே என்ற
கருத்தில்தான் திருக்குறளை இயற்றினார்.
அதனால்தான் இன்பத்தைப்பற்றிக்
கூறும்
காமத்துப்பாலை மூன்றாவது பகுதியாகக் கூறினார்.
இவ்வுண்மையையும்,
தமிழ் நூல்
மரபையும் அறியாதவர்களே, வள்ளுவர்
காமத்துப்பாலை ஏன் இயற்றினார் என்று
கேட்பர்.
இவர்கள் கேள்வி தவறு;
தமிழர் பண்பாட்டை அறியாமல் எழுந்தது
என்று விட்டுவிடவேண்டும்.
|