|
இந்த மூன்று குறள்களுமே, வள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர்
என்பதற்குச் சான்றாகும். திருவள்ளுவர் எந்த நூல்களையும் படிக்கவில்லை;
எந்த
நூல் பொருள்களையும்
பின்பற்றவில்லை; எல்லாப்
பொருள்களைப்பற்றியும் தானே
முழுதுணர்ந்து திருக்குறளை
இயற்றினார்
என்று கூறுவோர்க்குச் சரியான
விடையளிக்கின்றன.
பழந்தமிழ் முறை
திருவள்ளுவர் தமது நூலைப் பழந்தமிழர் பண்பைப் பின்பற்றியே
செய்திருக்கின்றார்.
முன்னோர் முறைக்கு மாறாக நூலியற்றும் வழக்கம்
பழங்காலத்தில் இல்லை. அறம்,
பொருள், இன்பம் மூன்றும் பொருந்தச்
செய்யுள்
இயற்றுவர்; இம்மூன்றைப் பற்றியும்
நூலியற்றுவர்; இதுவே
பழந்தமிழர் முறை,
திருவள்ளுவர் இந்த முறையைப் பின்பற்றியே திருக்குறளை முப்பாலாக
இயற்றினார்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று
பகுதியாகத் திருக்குறள்
அமைந்திருக்கின்றது. இம்மூன்றும் அறம் பொருள்
இன்பங்களைப் பற்றிக் கூறுவன.
பழந்தமிழ் நூல் முறையை அறியாதவர்கள். திருவள்ளுவர்
காமத்துப்பாலை
ஏன்
பாடினார் என்று ஒரு ஐயத்தைக் கிளப்புவர்.
காமத்துப்பாலில் என்ன
இருக்கின்றது? அறமா?
அரசியலா?
ஒன்றுமில்லையே; பேரறிஞரான வள்ளுவர்
காமத்தைப் பற்றி இருபத்தைந்து
அதிகாரங்களிலே கூறுகின்றார். இவற்றால் என்ன
பயன்? இவ்வாறு
கேட்போர் சிலர்
உண்டு.
காமத்துப்பாலில்
தமிழர்களின் உயர்ந்த பண்பாடு அமைந்து கிடக்கின்றது. ஆணும், பெண்ணும் அன்புடன்
|