மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிக்கின்ற பகையும் தன்னிடம்
சேராமல்
காத்துக்கொண்டு
வாழும் நாடே சிறந்த நாடாகும்.’’ (கு.734)
|
|
|
‘‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
|
|
பல கருத்துள்ள கூட்டங்களும், உறவாடிக் கெடுக்கும் பகையும்,
ஆளுவோனைத் துன்புறுத்திக்
கொல்லும் சிற்றரசர்களும் இல்லாத நாடே
சிறந்த
நாடாகும்.’’
(கு.735) |
|
|
‘‘பிணியின்மை, செல்வம், விளைவின்பம், ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து.
|
|
மக்கள் நோயில்லாமல் வாழ்வது, வேண்டிய செல்வப் பொருள், நல்ல
உற்பத்தி, எல்லோரும்
இன்புற்று வாழ்தல், சரியான பாதுகாப்பு இவ்வைந்தும்
நிறைந்திருப்பதே ஒரு நாட்டிற்கு அழகாகும்.‘‘ (கு.738)
ஒரு நல்ல நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இக்குறள்கள்
விளக்கியிருக்கின்றன. செல்வமும்,
அமைதியும் குடிகொண்ட நாட்டு
மக்கள்தாம்
இன்பமாக வாழ்வார்கள் என்ற கருத்தை இக்குறள்களிலே
காணலாம்.
|
|
|
‘‘வெண்மை எனப்படுவது யாதுஎனின்; ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
|
|
அறியாமை என்று அழைக்கப்படுவது யாதென்றால், ‘‘நாமே சிறந்த
அறிவுடையோம்’’ என்று தம்மைத்தாமே
பெரிதாக எண்ணிக்கொள்ளும்
செருக்காகும்’’.
(கு.844) |
|
|
‘‘ஏவவும் செய்கலான்; தான்தேறான்; அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
|
|
பிறர் சொல்வதையும் கேட்டுச் செய்யமாட்டான்; தானே அறிந்தும்
செய்யமாட்டான்;
அவ்வுயிர் ஒழியும் வரையிலும் இவ்வுலகிற்கு ஓர்
நோயாகும்.’’
(கு.848)
|