|
பிரிந்து செல்லாமல் இருப்பதானால், அதைப்பற்றி என்னிடம் சொல்.
பிரிந்து
போய்
விரைந்து வருகிறேன் என்று சொல்வாயானால், நீ வரும்
வரையிலும் யார்
உயிரோடு
வாழ்ந்திருப்பார்களோ அவர்களிடம் அதைப் பற்றிச் சொல்’’.
(கு.1151)
இக்குறள் கற்புள்ள
ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டிருக்கும்
அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு
ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ
முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள்தாம்
சிறந்த காதலர்கள்;
இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக
இனிது
நடத்துவார்கள். இக்கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள்.
மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும்
பொது நீதிகள் எந்நாட்டினரும், எம்மதத்தினரும்,
எவ்வினத்தினரும்,
எம்மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள்
அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதனால்தான்
திருக்குறள் உலகப்
பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர்
உலகப்
புலவர் என்று போற்றப்படுகிறார்.
|