|
இன
இன்றும் ஓங்கியிருப்பதனாலும், மேலையர்
என்னும் ஐரோப்பியர் கீழை நாட்டு நாகரிகத்தை ஆரிய அடிப்படையிலேயே ஆய்ந்து வருவத னாலும்,
பண்டை எகிபதிய நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் அவருக்கு அண்மை நாடுகளில் தோன்றி வளர்ந்திருந்தமையாலும்,
அவ் விரு நாகரிகத்தையே உலக முதுநாகரிகமாகக் கொண்டு அவற்றை ஆராய் வதிலேயே பெருங் கவனத்தைச்
செலுத்தி வந்திருக்கின்றனர்.
பிறமொழி யெழுத்துகள்
எகிப்திய சுமேரிய நாகரிகத்
தோற்றம் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டது. எகிபதிய எழுத்து முதற்கண் படவெழுத்து
(Pictograph);
பின்னர்க் கருத்தெழுத்து
(Ideograph or logograph).
சுமேரிய நாகரிக வழிப்பட்ட
சேமிய வெழுத்து முதற்கண் அசை யெழுத்து (Syllabary கி.மு. 2000); பின்னர் ஒலியெழுத்து
(Alphabet
கி.மு. 1500).
கிரேக்கர் சேமிய ஒலியெழுத்தைப்
பினீசிய
(Phoenician) வணிகர் வாயிலாகக் கற்றுத் தமக்கேற்றவாறு திருத்திக்கொண்டதாகச்
சொல்லப்படுகின்றது. கிரேக்க எழுத்தினின்று இலத்தீன் எழுத்தும், இலத்தீன் எழுத்தினின்று ஆங்கிலம்
முதலிய பிற ஐரோப்பிய மொழி யெழுத்துகளும் அமைந்துள்ளன.
கிரேக்க எழுத்துகள் அல்பா
(Alpha), பேற்றா
(Beta) என்று தொடங்குவதால், அவ் வண்ணமாலை `அல்பாபேற்று'
(Alphabet) எனப் பெயர் பெற்றது. இது தமிழில் உலக வழக்கில் `அஅன்ன ஆவன்னா' (அ ஆ, அவ்வா) என்று வழங்குவது
போன்றது.
கிரேக்க வண்ணமாலை முதற்கண்,
A (short and long) B,
G, D, E (short), W, Z, E (long). TH. I (short and long), K,L,M,N,X,O (short),
P,R,S, T,U (short and long), PH, KH. PS, O (long) என்னும் 25 எழுத்துகளைக் கொண்டிருந்தது.
பின்னர்த் திகம்மா
(Digamma) என்னும்
W நீக்கப்பட்டுவிட்டது.
இலத்தீன் வண்ணமாலை, முதற்கண்,
a, b, c, d, e, f, g,
h, i, k, l, m, n, o, p, q, r, s, t, u, x என்னும் 21 எழுத்துகளையே கொண்டிருந்தது. பின்னர்
j, v, y, z என்னும் 4 எழுத்துகள் சேர்க்கப்பட்டன.
கிரேக்க எழுத்துகளுட் பலவற்றின்
வடிவம் வேறு. அவற்றை இங்குக் காட்டலாகாமையால் ஆங்கில வடிவிற் குறிக்கப்பட்டுள்ளன.
சீன எழுத்து, கி.மு. 1000
ஆண்டுகட்கு முற்பட்டது. அது 4000 கருத்தெழுத்துகளைக் கொண்டது.
|