|
சப
சப்பானியர் கி.பி. 5ஆம்
6ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கருத் தெழுத்துகளைக் கடன் கொண்டனர். அவை ஐயாயிரமாகப் பெருகி
ஈராயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சொற்களின் முதனிலைகளைக் குறிக்கக் கருத்தெழுத்துகளும்,
ஈறுகளைக் குறிக்க 'இரகன'
(Hiragana), 'கற்றகன'
(Katakana) என்னும் இருவகை அசையெழுத்துகளும்
கையாளப்படுகின்றன வென்றும், இதனால் சப்பானிய மாணவன் 1500 சீனக் கருத்தெழுத்துகளையும் (ஏறத்தாழ
100) இருவகை அசையெழுத்துகளையும் கற்க வேண்டியுள்ள தென்றும், பாடுமேர்
(Bodmer) கூறுகின்றார்.
(The Loom of Language, p.
438).
அரபி யிலக்கியம் கி.பி.
6ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அதன் எழுத்தும் அக் காலத்ததே. அது 28 எழுத்துகளைக் கொண்டது.
அவற்றுள் ஒன்று அ
(Fatha), இ
(Kasra), உ
(Damma) என்னும் முக்குறிற்கும் பொதுவான குறி. வகர
வெழுத்து உகரத்தையும் யகரவெழுத்து இகரத்தையும் இடத்திற்கேற்ப உணர்த்தும். இருவேறு குறிகள் சேர்ந்து
ஆ, ஈ, ஊ என்னும் நெடில்களைக் குறிக்கும். சில இணைப்பெழுத்துகளும்
(Ligatures) உண்டு.
அரபிக்கு இனமான எபிரேய இலக்கியம்
கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அது 22 எழுத்துகளைக் கொண்டது. உயிரொலிகளை யுணர்த்தும்
முறையில் அது அரபியொத்ததே. அவ்விரு மொழிகளின் வண்ணமாலைகளும் வெவ்வேறு வடிவுகொண்டனவேனும்,
கிரேக்கத்தைப் போன்று கானானிய மூலப் பினீசிய வண்ணமாலையினின்று திரிந்தவையே.
தமிழின் தொன்மை
கி.மு. 2000 ஆண்டுகட்கு
முற்பட்ட ஊர் என்னும் பாபிலோனிய நகரகழ்வில், கி.மு. 3000 ஆண்டுகட்குமுன் சேரநாட்டினின்று
ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்குமர உத்தரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊர் என்பது நகர் என்று
பொருள்படும் அக்கேடியச்
(Akkadian) சொல். அதுவே பண்டைத் தமிழகத்தில் மருதநில நகரைக்
குறித்த பொதுச்சொல்.
அப் பாபிலோனிய நகரிற் பிறந்து
வளர்ந்த ஆபிரகாமின் பெயர், அப்பன் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவான ஆப் என்பதை நிலைச்
சொல்லாகக் கொண்டது. அவனே அரபியர்க்கும் இசரவேலர்க்கும் பொதுவான முன்னோன். அவன் காலத்தில்
அவ் வீரினத்தாரும் தோன்றவே யில்லை. ஆகவே, அரபியும் எபிரேயமுமான அவர் மொழிகளுந் தோன்ற
வில்லை. ஆபிரகாம் பேசின மொழி அக்கேடியன்.
தமிழர் தோற்றமும் பரவலும்
குமரிநாட்டு மக்கள் தமிழின்
வெவ்வேறு நிலையில் வெவ்வேறு திசை சென்று பரவியுள்ளனர். தமிழின் முச்சுட்டுகளினின்று தோன்றிய
மூவிடப் பெயர்கள் ஒரு காலத்தில் குமரிநாட்டு மக்களொடு ஆத்தி
|