|
ப
பாண்டியர் முதலிரு கழகம் போன்ற
தொன்றின்மையால், இங்ஙனம் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரம்பின்றிப் பாழாக்கப்பட்டு
வருகின்றன.
இன்று எழுத்து மாற்றத்தை
விரும்புவார் தகுதி நோக்கின், பெரும் புலமையும் மரபுகாக்கும் பொறுப்புத்தன்மையும் ஒருவர்க்கு
மில்லை யென்றே தெரியவரும்.
தமிழவேள் உமாமகேசுவரம்
பிள்ளை அவர்கள்,
10, 11-6-1934 அன்று, திருநெல்வேலி
இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சென்னை மாநிலத் தமிழர் முதல் மாநாட்டில் தலைமை தாங்கி, ஆற்றிய
சொற்பொழிவில் ஒரு பகுதி வருமாறு:
"பழந்தமிழ்க் காலமுதல்
வடசொற்களும் திசைச்சொற்களும் தமிழில் இன்றியமையாதவிடத்து வழங்கி வந்திருக்கின்றன. ஆனால்,
அவ்வாறு வழங்கி வருகின்றபோது, அவை தமிழியலுக்கு ஏற்ப உருமாறித் தொழில் புரிய வேண்டுமென்பது
ஆன்றோர் வகுத்த தமிழ்மரபு. "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா
கும்மே'' என்பது நூற்பா. வடவெழுத்துகளிற் பல தமிழியலுக்கு முரண்படுதலின், அவற்றை நீக்கி எழுதுவதே
முறையென மூதறிஞர் கண்டனர். வடசொற்கள் பெரிதும் வழங்கத் தலைப்பட்ட பிற்காலத்திலும், இவ்
வியலுக்கு மாறுபடா வண்ணம் நன்னூலார் விதி வகுத்தார். சங்ககால முதல் இதுகாறும் தோன்றிவரும்
சிறந்த நூல்கள் யாவும், இம் மொழிமரபு வழுவாமல் பாதுகாத்து வருகின்றன. ஒரு சிலர், தமிழ் எழுத்திலக்கணத்தில்
குறைபாடுகள் மலிந்துள்ளனவென்றும், அவற்றை அகற்ற வேண்டுமென்றும், கூறுகின்றனர். 'குரோமர்' என்ற
ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் சில குறைகளைத் தொகுத்து
ஒரு கவியில் விளக்கியுள்ளார். எனினும், ஆங்கில மொழியின் வளர்ச்சி சிறிதுங் குன்றவில்லை.
அச்சுக்கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர், தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்பு
கின்றனர். வேறு சிலர் 'f' என்ற ஆங்கில எழுத்தையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை
எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை. வீரமா முனிவர் போப்பையர் போன்ற அயல்நாட்டார்கூட இவ்வாறு
சொல்லத் துணியவில்லை. வடகலை தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர்
போன்றார், வடநூலார் கொள்கையில் அடிப்பட் டிருந்தும், தமிழமரபு இழுக்கா வண்ணம் உரைநூல்கள்
இயற்றினார்களே! ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும்
அவற்றைத் திருத்தத் துணியாதபோது, தமிழ்மொழியைத் திருத்தலா மென்பது பேதைமையாகும். கலைநூல்களில்
வழங்கும் குறியீட்டுச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் நூலிலோ வழக்கிலோ கிடைத்தால்,
அவற்றைப் பயன்படுத்த வேண்டும்; இல்லாதபோது தமிழில் படைத்துக் கொள்ள வேண்டும்...................செருமானியர்
அறிவுநூற் பொருள்களைக்
|