|
New Page 1
செம்பொன்பதின்றொடி என்னும் சொற்றொடர் செம்பின் நிறையைக்
குறிப்பின், 'ஒன் (பொன்)'என்னும் இரண்டாம் அசையிலும், பொன்னின் நிறையைக் குறிப்பின் 'பதின்'
என்னும் மூன்றாம் அசையிலும் அழுத்தம் விழும். இங்ஙனமே பிறவும்.
இனித் தொடர்ச்சொற்களில் மட்டுமன்றி, தனிச்சொல் தொடர்ச்சொல்
ஆகிய இரண்டிற்கும் பொதுவான பொதுச் சொற்களிலும், அவை தொடர்ச்சொல்லாங்கால் அழுத்த நிலைமாறும்
என அறிக.
|
எ-டு : |
|
| |
|
|
1. பெருமான் - |
1. பெரியோன் |
(தனிச்சொல்) |
| |
|
|
| |
2. பெரிய மான் |
(தொடர்ச்சொல்) |
| |
|
|
|
2. ஒளவையார்
- |
1. ஒரு புலத்தியார் |
(தனிச்சொல்) |
| |
|
|
| |
2. ஒளவை யார்? |
(தொடர்ச்சொல்) |
பெருமான் என்பது தனிச்சொல்லாயின், இயல்பான முறையில் 'பெ' என்னும்
முதலெழுத்திலும் அது தொடர்ச்சொல்லாயின் 'மான்' என்னும் இரண்டாம் அசையிலும் அழுத்தம் விழுவதைக்
காண்க. இங்ஙனமே இத்தகைய பிறவும்.
இதுகாறுங் கூறியவற்றால், இயல்பு, பொருள் வேறுபாடு, சொற்பிரிப்பு ஆகிய
மூவகையிலும் தமிழிலும் ஒலியழுத்தம் உண்டென்றும் இயல்பு வகையான ஒலியழுத்தம் நுண்மாண் நுழைபுலம்
மிக்க முற்காலத்து மாணவர்க்கு வேண்டாவெனக் கூறப்படாது விடப்பட்டிருப்பினும் இக்கால நிலைக்கேற்ப
அதனையுஞ் சேர்த்துக்கொள்ளல் வேண்டுமென்றும், ஐயந்திரிபற அறிந்துகொள்க.
|