பக்கம் எண் :

100ஒப்பியன் மொழிநூல்

மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர்.1 தண்டை அடியென்றுங் கூறலாம்.

மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியுமாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும்.

மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப்பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ணுப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா, போ என்பன போன்ற முக்கிய வினை கள் என்பனவே போதுமாயினும், பல சொற்களும் தெரிந் திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறு தலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்த தாகும்.

8. ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழி நூல் பயிலலாம்.

ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத் திற்குச் செல்வது இன்றியமையாததன்று; தம் இடத்திலிருந்து கொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதி களையுந் துணைக்கொண்டு அயன் மொழிகளைக் கற்கலாம்.

9. ஒரு மொழியறிவு பிறமொழி யறிவுக்குத் துணை யாகும்.

ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழியிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டுபிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக் கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதனாலும், உலகத் தாய்மொழியின் இயல் பையும் வளர்ச்சியையும் அறியத்தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலாலும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவு


1. வேரும் முதல் வேர் (Primitive root), வழி வேர் (Secondary root) சார்பு வேர் (Tertiary root) என மூவகைப்படும். அவற்றுள், முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும்.