பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்117

னென்றும், பின்பு இப்போது வைகைக்கரையிலுள்ள மதுரை கட்டப்பட்டதென்றும், குமரிமுனைக்குத் தெற்கில் குமரி யென்றோர் மலைத்தொடரும் ஓர் ஆறும் இருந்தனவென் றும், அவ் வாற்றுக்கும் அதற்குத் தெற்கிலிருந்த பஃறுளியாற் றுக்கும் இடைநிலச்சேய்மை 700 காதமென்றும், குமரியாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடல் வாய்ப்பட்டதென்றும் பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது.

(1) பஃறுளியாறு

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

(புறம். 9)

(2) (தென்) மதுரை

“தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் ....................... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.”1

(3) குமரிமலை

மேற்குத்தொடர்ச்சிமலை, முன்காலத்தில், தெற்கே நெடுஞ்சேய்மை சென்றிருந்ததாகவும், அங்குக் குமரியென்று அழைக்கப்பட்டதாகவும், தமிழ்நூல்களால் தெரிகின்றது.

குமரிமலையையே மகேந்திரமென்று வடநூல்களும், பிற்காலத் தமிழ்நூல்களும் கூறும்.

அநுமன் மகேந்திரமலையினின்று கடலைத் தாண்டி, இலங்கைக்குச் சென்றதாக இராமாயணம் கூறுகின்றது.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

(கீர்த்தித் திருவகவல்)

என்றார் மாணிக்கவாசகர்.

“..... தாமிரபரணி நதியைத் தாண்டுங்கள்.... அதை விட்டு அப்பாற் சென்றால்..... பாண்டிநாட்டின் கதவைக்2 காண்பீர்கள்.


1. இறை. பக். 6

2. கபாடபுரம்