“வடவேங்கடந் தென்குமரி” | (பாயிரம்) |
எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய் தமையிற்..... கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட் டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம்,”1 என்று பேராசிரியர் கூறியதினின் றறியப்படும். ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்களெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவேயாகும். “வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்.....” எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்தநூல்”2 என்று பேராசிரியர் கூறியதுங் காண்க. (5) வீரமகேந்திரம் குமரிநாட்டைக் கடலானது, பகுதிபகுதியாகவும், பல முறையாகவும் கொண்டமையின், இலங்கைக்குத் தெற்கே வீர மகேந்திரபுரத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு நிலப் பகுதி, பல கடல்கோளுக்குத் தப்பிக் கடைசியில் சூரபன்மன் காலத்திற்குப் பின், முழுகிப்போனதாகக் கந்தபுராணத்தி னின்றும் தெரிய வருகின்றது. (6) இலங்கை இலங்கை ஒருகாலத்தில் இப்போதிருந்ததைவிடப் பெரிதாயும், வடபுறத்தில் தமிழ்நாட்டொடு சேர்ந்தும் இருந் தது. முதலில், தென்புறத்திலும் பிரிவில்லாதிருந்தமை சில சான்றுகளாலறியப்படும். “தாப்பிரப்பனே (Tabropane) தலைநிலத்தினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் வதிநர் 'பழையொ கொனாய்' (Palaiogonoi) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள்
1. தொல். பொ. 649, உரை. 2. தொல். பொ. 650, உரை.
|