தோறும் கடலில் முழுகிக்கொண்டே வருகின்றது” என்று எஸ்.வி. தாமசும் (Thomas) கூறியிருப்பதினின்று, குமரியாறு மூழ்கின பின்னும் தமிழ்நாடு குறுகி வந்திருப்பதையறியலாம். சீகாழி ஒருமுறை வெள்ளத்தாற் சூழப்பட்டமை தோணிபுரம் என்னும் அதன் பெயரால் விளங்கும். குமரிநாடு - புறச்சான்றுகள் (1) வியன்புலவர் எக்கேல் “உயிர்களின் 'பெயர்வும் பிரிந்தீடும்'பற்றிய அதிகாரத் தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல் “இந்துமாக் கடல் ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய், ஆப்பிரிக்கா வின் கீழ்கரை மட்டும் படர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாயி ருந்தது. ஸ்கிளேற்றர் இப் பழம் பெருங்கண்டத்தை, அதில் வதிந்த குரங்கொத்த உயிரி (பிராணி) பற்றி லெமுரியா என்ற ழைக்கிறார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந் திருக்கக் கூடுமாதலின், மிக முக்கியமானது. காலக்கணித உண்மைகளைக் கொண்டு, இப்போதை மலேயத் தீவுக் கூட்டம், முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேஸ் கூறியுள்ள முக்கியச் சான்று, விதப்பாய் உவகை யூட்டத்தக்கது. போர்ணியோ, ஜாவா, சுமத்திரா என்னும் பெருந்தீவுகளைக்கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலேயத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவி னால், ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சற்று முந்திக்கூறிய லெமுரியக் கண்டத்தோடும் அது இணைக்கப் பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிஸ், மொலுக்காஸ், புதுக்கினியா, சாலோமோன் தீவு கள் முதலியவற்றைக்கொண்ட கீழைப்பிரிவாகிய ஆஸ்திரே-மலேயத் தீவுக்கூட்டம், முன் காலத்தில் ஆஸ்திரேலியா வோடு நேரே யிணைக்கப்பட் டிருந்தது”1 என்று கூறுகின்றார். (2) திருவாளர் ஓல்டுகாம் “செடிகொடிகளிலும், உயிரி(பிராணி)களிலும், ஆப்பிரிக் காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக
1. Castes and Tribes of Southern India, Vol. I, pp. 20, 21.
|