பக்கம் எண் :

132ஒப்பியன் மொழிநூல்

நெருங்கிய ஒப்புமைகளைக் கொண்டு திருவாளர் ஓல்டுகாம், ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்த தென்று முடிவு செய்கிறார்.”1

“இந்துக்கட்குப் பேரே தெரியாத சில பழைய காலத்துப் பெருமகமையான பப்பரப்புளி, அல்லது யானைப்புளி, அல்லது சீமைப்புளி (Baobab or Adansonia digitata) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்திய தீவக்குறை (Peninsula)யின் தென்கோடியில் அயல் நாட்டு வணிகம் நிகழ்ந்துவந்த சில துறையகங்களில், அதாவது குமரிமுனையருகிலுள்ள கோட் டாற்றிலும் திருநெல்வேலிக் கோட்டகை (ஜில்லா)யில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கை யிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னும் காணப்படுகின்றன என்று கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார்.

தேக்கு பர்மாவிலும், தென்னிந்தியாவிலும், ஆப்பிரிக் காவிலும்; புளி சாவகத்திலும் இந்தியாவிலும்; தென்னை இந்தியாவிலும் இலங்கையிலும் மேலனீசியத்(Melanesia) தீவுகளிலும்; நெல் பர்மாவிலும் இந்தியாவிலும் சீனத்திலும் ஜப்பானிலும் சாவகத்திலும்; கரும்பு சீனத்திலும் ஜாவாவிலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டு வளர்கின்றன.

கோளரி (சிங்கம்) இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா விலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.

“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூர”

(ஐங். 63)

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூரன்”

(ஐங். 364)

என்னுங் குறிப்புகளால் பண்டைத் தமிழ்நாட்டில் நீர்நாய் என்றோர் உயிரியிருந்தமை யறியப்படும். அரிப்பான் (Rodent) இனத்தைச் சேர்ந்த நீர்நாய் (Beaver), நீர்வாழி (Aquatic), இருவாழி


1. Castes and Tribes of Southern India, Vol. I, p. 24