பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்133

(Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)விலும் வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொது வகராதி (New International Dictionary) யில்1 குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்பு களிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டி ருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) இனமான தாகத் தெரிகின்றது.

அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இரு வகையுண்டு. இவ் விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை,

'ஓதிம விளக்கின்' என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, “ஈண்டுக் காரன்ன மென்றுணர்க” என்றும், “வெள்ளையன்னங் காண்மின்” என்னும் சீவக சிந்தாமணித் தொடருக்குக் “காரன்னமு முண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு”2 என்றும் நச்சினார்க்கினியர் வரைந் துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத் திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று3 தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம்.

உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயை பின்மைக்குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம்.

சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டி லும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ங னமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டிநாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா,

(3) காட்எலியட

காட் எலியட் என்பவர் எழுதியுள்ள 'மூழ்கிய லெமு ரியா' (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப் படத்தி னால், “ஒரு


1. Vol. I. P. 200

2. சீவக. 4 : 80.

3. All About Birds, p. 141.