பஞ்சவன் பாண்டியன் தன் நாட்டை ஐந்து பகுதியாக்கி, ஐந்து பதிலாளிகளால் ஆண்டு வந்தமையால், பஞ்சவன் எனப் பட்டான். இதை விசுவநாத நாயக்கர் சரித்திரத்தாலறிக.1 குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்து நிலங்களை யுடையவன் பஞ்சவன் என்ற காரணங் கூறுவது பொருந்தாது, அது ஏனைச் சேரசோழர்க்கும் ஏற்குமாதலின். கௌரியன் மலைமகளுக்குப் பசுமை நிறம்பற்றிக் கௌரி யென்று பெயர். கௌரி பண்டொருகால் மலையத்துவச பாண்டியனின் மகளாய்ப் பிறந்து (தடாதகைப்பிராட்டி யென்னும் பெயரு டன்), பாண்டிநாட்டை யாண்டதாகக் கூறும் திருவிளையாடற் கதை பற்றிப் பாண்டியனுக்குக் கௌரியன் என்னும் எச்சமுறைப் பெயர் (Patronymic) தோன்றிற்று. அருச்சுனன் நீராட்டுப் போக்கிற்காகத் (தீர்த்த யாத்திரை) தென்னாடு வந்தபோது பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாண்டியன், பஞ்சவன், கௌரியன் என்னும் பெயர்கள், முறையே, பாண்டவர், பஞ்சவர், கௌர வர் என்னும் பெயர்களுடன் ஒலியில் ஒத்திருப்பதாலும், பாண்டியன் என்னும் பெயர் பாண்டவன் என்னும் வடிவிலும் இலங்கைச் சரிதை நூலில் வழங்குவதாலும், பாண்டியன் முதலிய பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்த வடமொழிப் பெயர்கள் என மயங்கினர் கால்டுவெல். பாரதத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முந் தின இராமாயணத்திற் கூறப்பட்ட பாண்டியன், பாரத வயவ ராற் பெயர் பெற்றதாகக் கூறுவது, பாட்டனின் முதற் கலியா ணத்திற் பேரன் பந்தம் பிடித்த கதையேயன்றி வேறன்று. இற்றையுலகிலுள்ள நாகரிக நாடுகளெல்லாம், பெரும் பாலும் கிறித்தவ ஆண்டூழிக் குட்பட்டவையாதலானும், மேனாடுகள் தற்கால நாகரிகமடைந்ததெல்லாம் சென்ற மூன்று
1. Pandyan Kingdom, p. 121, 122.
|