பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்139

நூற்றாண்டுகட்குள்ளேயே யாதலானும், பொதுவாய் உலகம் வரவர எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து, சென்ற நூற்றாண்டில் அநாகரிகராயிருந்த பலநாட்டார் இந் நூற்றாண் டில் நாகரிகமடைந்திருக்கவும், தமிழர் இவ் விருபதாம் நூற் றாண்டிலும் மிகத் தாழ்நிலையிலிருப்பதாலும், தமிழின் அல் லது தமிழ் நாட்டின் சரித்திரம் தமிழர்க்கே தெரியாதிருப்ப தாலும், மேனாட்டார்க்குத் தமிழர் நாகரிகத்தின் தொன்மை விளங்குவதில்லை. அவருள், இன்னெஸ் (Innes) என்பவரோ தமிழ்க்கழகமென்பதே இல்லையென்று கொண்டவர்.

சோழன்

“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து”

எனப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் பாடியிருப்பதால், முத்தமிழ் நாட்டுள்ளும் சோழநாடு சோற்றிற்குச் சிறந்திருந் தமை அறியப்படும். இன்றும் சோழநாட்டின் சிறந்த பகுதியா யிருந்த தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு நெற்களஞ்சியமா யிருப்பது கவனிக்கத்தக்கது. சோறு என்பது முதற்கண் நெல்லரிசிச் சோற்றையே குறித்தது.

சொல் = நெல். சொல் - சொன்றி = சோறு. சொல் - சோறு. முதற்காலத்தில் நெல் சோழநாட்டில் இயற்கையாகக் கூட விளைந்திருக்கலாம்.

சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே.

எ - டு : கல் - கள் - காளம் - காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல்.

“கஃறென்னும் கல்லத ரத்தம்”

(தொல். எழுத்து. 40. உரை)

சுல் - சுள் - சூள் - சூழ்.
துல் - துள் - தொள் - தொழு - தோழன்.
நுல் - நுள் - நுளை - நுழை - நூழை.