பக்கம் எண் :

140ஒப்பியன் மொழிநூல்

புல்-பொல்-பொள்-போழ்.
கில்-கிள்-கீள்-கீழ்.
சொல்-(சோல்)-(சோளம்)-சோழம்-சோழன்.

இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும்.

கா : நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே.

சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும்.

கா : தமிழ் தெலுங்கு வடமொழி

தமிழம்

 

திரவிடம் (திராவிடம்)

கிழங்கு

கெட்ட

 

கோழி

கோடி

 

சேரன்

தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு.

சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் முறையே சாரல், சாரனாடன் என்னும் பெயர் கள் தொகைநூல்களிற் பயின்றுவருகின்றன. சார் என்னுஞ் சொல் சேர் என்றானாற் போல, சாரல் என்னுஞ் சொல்லுஞ் சேரல் என்றாகும். சேரநாடு குடமலையின் இருமருங்குமுள்ள சாரலாதலின், அதையாளும் சேரன் சேரல் எனப்பட்டான். இது இடவாகுபெயர்.

சேரல் - சேரன். சேரல் - சேரலன் - கேரளன்.
ல்-ன், போலி. கா: உடல்-உடன், வெல்-வென்.
ச-க, போலி. கா:சீர்த்தி-கீர்த்தி, செய் (தெ.)-(சை)-கை.
ல-ள, போலி. கா: செதில்-செதிள், மங்கலம்-மங்களம்.