பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்145

இனி, இற்றைச் செகர முதற் சொற்கள் சில பண்டு சகர முதலவா யிருந்தன வென்றும் அறிதல் வேண்டும்.

எ - டு : சத்தான் - செத்தான், சக்கு - செக்கு.

இவற்றை யெல்லாம் நோக்காது, குருட்டுத்தனமாய்த் தொல்காப்பியரைக் காத்தற்பொருட்டுத் தொல்பெருந் தமிழின் பெருமையைக் குலைப்பது அறிஞர்க்கு அழகன்று.

சவதலி, சம்பளி, சமாளி என்பன போன்ற திராவிடச் சொற்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆயின், மேற் காட்டிய தூய தென்சொற்களெல்லாம் தொன்றுதொட்ட வையே.

சம்பு என்பது சண்பு என்னும் இலக்கியச் சொல்லின் திரிபா யிருப்பினும், சம்பங்கோரை, சம்பங்கோழி என்பன தொன்றுதொட்ட உலக வழக்கே.

(2) “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”

(தொல். மொழி. 34)

என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோவெனின்,

“நுந்தை யுகரங் குறுகிமொழி முதற்கண்
வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக்
குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி
மயலணையு மென்றதனை மாற்று”

“இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க” என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். எழு. 51)

(3) “வகரக் கிளவி நான்மொழி யீற்றது”

(தொல். மொழி. 48)

அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க.

(4) “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”

(தொல். மொழி. 49)

என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதன வெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன்,