என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொரு ளையே சாத்திரியார் நன்றாயறியவில்லை. 'மன்னா தாகும்' என்னும் வினைக்குப் 'பெரும்பாலும் வராது' என்பதே நூற்பாவிற் குறித்த பொருள். ஒருவேளை, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” | (தொல். இடை. 4) |
என்னும் நூற்பாவில் மிகுதிப் பொருள் மன்னைச் சொற்குக் குறிக்கப்படவில்லையே என்று அவர் கூறலாம். தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படா மையானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்) களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப் பியத்தில் ஒன்றைப்பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது. நன்னூலார் பிற்காலத்தவராதலின், தொல்காப்பியரினும் விரிவா யாராய்ந்து, “மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும்” | (நன். 432) |
என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர். இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள 'மன்னா தாகும்' என்னுஞ் சொல் வினைச்சொல்லாதலின், இடைச்சொல் லாகாதெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரி னாயது, வினையினாயது என மூவகையென்றும், அவற்றுள் மன் என்னும் சொல் வினையி னாயதென்றும் கூறிவிடுக்க. கா : | இயற்கை | பெயர் | வினை | | ஆவா! | ஐயோ! | (என்றான்) என்று | | சீ | (பாவம்!) | (போன்றான்) போல | | சலசல | முறையோ! | (கொண்டான்)கொண்டு (3-ம் வே.உ.) |
|