டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையானதென்பதை. அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும், “உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” | (புறம். 201) |
என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம். மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக் கழக அகராதியில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்ற தென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதையறியாமையா லேயே, மேற்கூறிய தவறுகளும் அன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிட ரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர் களையிட்டனர் என்க. மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோ வேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அச் செய்யுளின் அடிக்குறிப்பில், “தபங்கரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, 'ஹொய்ஸள' என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமை யால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப் பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தை யடுத்த காட்டி லுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சள னென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப் பட்டு வருந்துகையில், அக் கோயிலி லிருந்த பெரியவர் அவனை நோக்கி 'ஹொய்ஸள' என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி
|