அளவெண் 'ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ தனிச்சொல் எனவாங்கு; சுரிதகம் “அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்.” (தோழி தலைவனை வரைவுகடாயது.) (2) வண்ணக வொத்தாழிசைக்கலி தரவு | “விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார் பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்; |
தாழிசை 1 | “காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ; |
|